அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 7224 பேருக்கான தலா 10,000/- பெறுமதியான ஏழு கோடி ரூபாய் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தால் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அவர்களின்
பணிப்புரை மற்றும் ஒத்துழைப்பின் பேரில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் MSM.Razzan அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய அக்கரைப்பற்று பிரதேச செயலகக் கணக்காளர் SL.Sarthar Mirza அவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் நகர் பிரிவு 5 சேர்ந்த 575 குடும்பங்களுக்கான முதற்கட்டமாக 5,000/- ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.
இம் நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் AM.லத்தீப் , உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் , நிருவாக கிராம உத்தியோகத்தர் , பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment