இந்திய கிராமம் ஒன்றில் மாணவிகளின் கல்விக்காக பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்துள்ளது. அவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வறட்சி மிகுந்த பகுதியான பரிடேவாடியில் உள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் திசாலே.
12,000 பேரின் பெயர் இந்த போட்டியில் பரிசீலிக்கப்பட்டத்தில் திசாலே தேர்வாகியிருக்கிறார்.
’கல்வி என்பது பிறப்புரிமை’
”இந்த நெருக்கடியான கால கட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் பிறப்புரிமையான கல்வி, ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் சிறப்பாக பணியாற்றுகின்றனர்,” என்கிறார் 32 வயது திசாலே.
ஆசிரியர்கள் “கொடுப்பதையும் பகிர்ந்து கொள்வதையும் எப்போதும் நம்புகின்றனர்”, என்று கூறும் திசாலே தான் பரிசாக பெற்ற ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களில் பாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இவர் பகிர்ந்து கொள்வதாக கூறிய தொகை ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள்.
பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவிகள் பள்ளிக்கு சென்று அதிக மதிப்பெண்களை பெற உதவிய திசாலேவை போட்டியின் நடுவர்கள் வெகுவாக பாராட்டினர்.
திசாலேவின் முயற்சியால் பள்ளியை தவறாவிடாமலும், இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படாமலும் மாணவிகள் கல்வியை தொடர்ந்தனர்.
திசாலே, வர்கே பவுண்டேஷன் என்ற அமைப்பால் நடத்தப்பட்ட போட்டியில்தான் வெற்றி பெற்று இந்த விருதை பெறுகிறார்.
மேலும் இவர் 83 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைனில் அறிவியல் பாடம் எடுக்கிறார். மேலும் சண்டை பகுதிகளில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு சர்வதேச திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறார்.
உலகளவில் இந்த பெருந்தொற்று சூழல் கல்வி அமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நெருக்கடியான சூழலில் ஆசிரியர்களின் பங்களிப்பே மாணவர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.” என்கிறார் இந்த போட்டியை வர்கே பவுண்டேஷனுடன் இணைந்து நடத்திய யுனெஸ்கோவின் துணை இயக்குநர் ஜெனரல் ஸ்டெஃபானியா கியான்னி.
அதன் நிறுவனர் சன்னி வர்கே, “உங்கள் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த உலகிற்கு பகிர்ந்து அளித்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் தெரியப்படுத்தியுள்ளீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
’கோவிட் கதாநாயகன்’
திசாலே பிரேசில், இத்தாலி, வியட்நாம், மலேசியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, அமெரிக்கா, மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்களுடன் தனது பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
திசாலே ஆரம்பத்தில் ஐடி பொறியாளராக வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் பொறியியல் கல்லூரி வாழ்வு அவர் எதிர்பார்த்தது போல அமையாத காரணத்தால், அவரின் தந்தை ஆசிரியர் பயிற்சியில் சேரலாம் என்ற யோசனையை திசாலேவுக்கு வழங்கினார். முதலில் தயங்கிய திசாலேவின் வாழ்வை மாற்றியது அவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த பாடங்கள்தான். ஆசிரியர்கள்தான் இந்த நாட்டில் உண்மையான மாற்றத்தை கொண்டுவர இயலும் என்று நம்பிய அவர், ஆசிரியராக வேண்டும் என்று முடிவு செய்தார்.
பரிசு பெற்ற ஆசிரியர்
படக்குறிப்பு,
பரிசு பெற்ற ஆசிரியர்
திசாலே முதன்முதலில் ஆசிரியராக பள்ளிக்கு செல்லும்போது அது இடிந்த கட்டடமாகவும் மாட்டு கொட்டகைக்கும், சேமிப்பு கிடங்குக்கும் இடையில் உள்ள ஒரு கட்டடமாகவும்தான் இருந்துள்ளது. மேலும் அங்கு பயிலும் மாணவிகள் மலைவாழ் மக்களாக இருந்தனர். அதிலும் அந்த பாடங்கள் அவர்களின் தாய் மொழியான கன்னடத்தில் இல்லை.
பெரும் முயற்சியால் கன்னடம் கற்றுக் கொண்ட திசாலே 1-4ஆம் பாடப்புத்தகத்தை மாற்றி வடிவமைத்துள்ளார். அதில் க்யு ஆர் கோட் என்ற முறையையும் சேர்த்துள்ளார்.
இதன்காரணமாக 2016ஆம் ஆண்டின் மாவட்டத்தின் சிறந்த பள்ளி என்ற பெயரை பெற்றது அந்த பள்ளி.
2016ஆம் ஆண்டு மத்திய அரசின் புதுமையான ஆராய்ச்சியாளர் என்ற விருதையும் பெற்றார்.
Post a Comment
Post a Comment