பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் கிரிகைகள் யாவும் கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் கிரியா கலாநிதி கணேச லோகநாத குருக்கள் அவர்களினால் நடைபெற்றது. மேலும் உதவி குருமாராகிய ஆலய பிரதம குரு சபா ரெட்ணம் குருக்கள், மயூரவதனன், குருக்கள் ஆகியோர் கலந்து அதிகாலை 05.30 மணிக்கு கிரிகைகள் யாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய தலைவர் நா.ராசலிங்கம். அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ்,கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.சஜித்திரா, ஆலய பூசகர்கள் ,ஆலயநிர்வாகத்தினர், பாண்டிருப்பு இந்து இளைஞா் மன்ற உறுப்பினர்கள்,ஏன பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்
கருத்துதெரிவிக்கையில்
இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் மக்கள் வீடுகளில் இருந்து வழிபாடுகளில் செய்யவேண்டும். எங்களது மாவட்டத்தில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அனைவரும் சுகாதார முறையினை வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் பணம் படைத்தவர்களும் சாதாரண தரத்தினரும் சமனானவர்கள் என கொரோனா வைரஸ் எடுத்துக்காட்டியுள்ளது.
மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு, பாதுகாப்பிற்கு பயப்பட்டு செயற்படாமல் மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்குமாறு இந்த நோய் தொற்றில் இருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்

Post a Comment
Post a Comment