நாட்டின் மேலும் சில பகுதிகளை நாளை (14) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
அந்தவகையில், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயூரா பிளேஸ் நாளை காலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள், வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தைக்குள் பிரவேசிக்கும் பகுதி, கெரவலப்பிட்டிய – நைதூவ, வெலிக்கடமுல்லை – தூவே வத்தை பகுதி என்பன நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வௌ்ளவத்தை – மயூரா பிளேஸ் பகுதியும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment