பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 31 வயதுடைய இளைஞனை செவ்வாய்க்கிழமை(8) இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சோதனை செய்தனர்.
இதன் போது குறித்த இளைஞனின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது
கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (9) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதற்காக 3 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவினை கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் வழங்கினார்.
Post a Comment
Post a Comment