நடிகர் ரஜினிகாந்தின் 71-ஆவது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 71 தகவல்கள் இவை
1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.
2.திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.
3.ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.
4.25 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரஜினிகாந்த் ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.
5.ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
6.அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.
7.திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
8.போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.
"ரஜினி அரசியலுக்கு வரவில்லை; தேர்தலுக்கு வருகிறார்"
1996ல் இருந்து 2021வரை - ரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள்
9.நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குநர் கே.பாலச்சந்தர் "அபூர்வ ராகங்கள்"(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.
10.அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
11.கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.
ரஜினி
பட மூலாதாரம்,GETTY IMAGES
12."நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.
13.எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.
14."ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்", என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
15.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன?
அரசியலில் ரஜினி: 'அபஸ்வரம்' பெற்ற வெற்றி வாய்ப்புகளும் சவால்களும்
16."கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.
17."என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்" என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.
18.அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் 'கத சங்கமா' என்ற படத்தில் அவர் நடித்தார்.
19.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
20.ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் "ப்ளட்ஸ்டோன்" 1988 ஆம் ஆண்டு வெளியானது.
21."அவர்கள்", "மூன்று முடிச்சு", "16 வயதினிலே" படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.
ரஜினி
பட மூலாதாரம்,GETTY IMAGES
22.கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.
23.இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் "நினைத்தாலே இனிக்கும்"
24.முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய "பைரவி"(1978).
25.பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
26.ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.
27."ஆறிலிருந்து அறுபது வரை"(1979), "ஜானி"(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.
28.நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
29.கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய "நெற்றிக்கண்"(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
30.இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் "மூன்று முகம்"(1982).
31."நல்லவனுக்கு நல்லவன்" திரைப்படத்திற்கு முதன் முதலில் 'ஃபிலிம்ஃபேர்' விருது பெற்றார் ரஜினி.
32.ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த "வள்ளி" திரைப்படம் 1993ல் வெளியானது.
33.90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.
34."மன்னன்" படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.
35.''ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்'' என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.
36."நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி", "பேர கேட்டாலே சும்மா அதிருதுல" போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.
ரஜினி
பட மூலாதாரம்,STRDEL/GETTY
37.1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.
38."அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.
39.1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
40.2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை மறுத்துவிட்டார்.
Post a Comment
Post a Comment