வி.சுகிர்தகுமார் 0777113659
தண்டனைகள் பெற்றுக்கொடுக்கும் இக்கட்டான நிலைக்கு எம்மை அழைத்துச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் வீதிகளில் தேவையற்ற விதத்திலும் முகக்கவசம் இன்றியும் நடமர்டுகின்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உருவாகியுள்ள கொரோனா அச்சறுத்தல் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் தேவையற்ற விதத்திலும் முகக்கவசம் இன்றியும் நடமாடிய 15இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது எங்களது தீர்மானமல்ல. எங்களது உயர் அதிகாரிகளின் தீர்மானம். அதை நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்றார்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரை 679 பிசிஆர் பரிசோதனைகளும் 400 அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றில் 14 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய சவலாக இன்றிருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு முதலாவது அலையில் நமது பிரதேசம் பாதுகாப்பாகவே இருந்தது. அதேபோல் இரண்டாவது அலையின் ஆரம்பத்திலும் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் தற்போது மக்களின் அதிக நடமாட்டம் காரணமாக சற்று அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 80 குடும்பங்களை சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்றுடன் தொடர்புடையவர்கள்.
ஆகவே தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தொற்றுள்ள பிரதேசங்களுக்கோ அல்லது அயல்கிராமங்களுக்கோ அல்லது அயல் வீடுகளுக்கோ மக்கள் தயவு செய்து செல்வதை தவிர்க்குமாறும் இன்றிலிருந்து வீதிகளுக்கு தேவையற்ற விதத்தில் செல்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அபாய நிலை நீங்கிய பின் தங்களது நடவடிக்கைகளை தாரளமாக மேற்கொள்ள முடியும் என்றும் கேட்டுக்கொண்டாh

Post a Comment
Post a Comment