நீர்கொழும்பு நகரில் 23 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிப்பு
தலாதூவ வீடமைப்புத் தொகுதியில் 15 தொற்றாளர்கள்
தனிமைப்படுத்தலில் இருந்து கடந்த திங்கட்கிழமை (30) விடுவிக்கப்பட்ட நீர்கொழும்பு நகரில் 23 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்; 15 தொற்றாளர்கள் தலாதூவ வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்தவர்களாவர் என்று நீர்கொழம்பு பொது சகாதார பரிசோதகர் இந்திக்க பண்டார ஜயதுங்க தெரிவித்தார்.
தலாதூவ வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ள பத்து வீடுகளில் 15 தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டள்தாகவும். இவர்களில் ஒரே வீட்டில் நான்கு தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த வீடமைப்புத் தொகுதிக்கு உட்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் ஒழுங்கைகள் மூடப்பட்டுள்ளன. இந்த வீடமைப்புத் தொகுதியில் அநேகமானவர்கள் நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவில் பணியாற்றும் சிற்றூழியர்களாவர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள 23 புதிய தொற்றாளர்களில் படல்கமை பிரதேசத்தில் வேலைத்தளமொன்றில் பணியாற்றுபவர்களாவர். இருவர் பெரியமுல்லலை பிரதேசத்தையும், மேலும் ஒருவர் தளுபத்தைபிரதேசத்தையும் சேர்ந்தவர்களாவர் என சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் வசந்த தெரிவித்தார்.
நீர்கொழம்பு பொது சுகாதார பரவில் இதுவரை 276 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment