திகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்




 


வி.சுகிர்தகுமார் 

  ஆலையடிவேம்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பினால் மாத்திரமே இத்தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவ்வாறு மக்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.
முகக்கவசம் இன்றி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடும் அனைவருக்கும் இன்றிலிருந்து வழக்குத்தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.