சவுதி அரேபியாவில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒருவர் மூலமாக 176 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதில் அதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக சவுதி அரேபியா சுகாதார அமைச்சின் பேச்சாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் ஆலி (Dr. Muhammad Al-Abd Al Aali) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளார் அவர் அமெரிக்காவிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றோடு சவுதிக்கு வருகை தந்தமையினால் அவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வில் பங்கேற்ற 54 பேருக்கு இவர் மூலமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது பின்னர் இந்த 54 பேர் மூலமாக ஏனையோருக்கும் பரவி மொத்தமாக 176 பேர் இவர் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 176 பேரில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர் என சவுதி அரேபியா சுகாதார அமைச்சின் பேச்சாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் ஆலி (Dr. Muhammad Al-Abd Al Aali) அண்மையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment