வீடுகள் அமைத்து தர கோரி





 (க.கிஷாந்தன்)


மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கொலனி பொது மக்கள் தங்களுக்கு வீடுகளை அமைத்து தருமாறு  கோரி 22.08.2017 அன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் தங்களின் வீட்டிற்கு முன்னால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


குறித்த கொலனியில் கடந்த மே மாதம்  29 ம் திகதி பெய்த கடும் மழையினால் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததனால் 5  குடும்பங்களை சேர்ந்த 20  பேர் பசுமலையில் உள்ள தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.


தங்கவைக்கப்பட்ட இவர்களை  கடந்த ஜூலை மாதம் 17 ம் அன்று அங்கிருந்து மீண்டும் இவர்களை தங்களின் குடியிருப்புக்கே செல்லுமாறு நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட இவர்கள்  சொந்த இடத்திற்கு சென்ற போதிலும் தற்போது கடும் மழை பெய்து வருகின்றமையினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மீண்டும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.


அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் அவர்கள் வாக்குறுதிகள் மட்டுமே வழங்கி வருகின்றதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை வெகுவிரைவில் எடுக்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.