நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கம்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நாவிதன்வெளி பிரதேச  செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில்  தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக  இன்று(05) முற்பகல்    நாவிதன்வெளி பிரதேச சபை  தவிசாளர்   அமரதாஸ ஆனந்த  ஆலோசனையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிரதேச செயலகத்தின் வாகன தரிப்பிடங்கள் மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் சமூர்த்தி பிரிவு காணி பிரிவு கணக்காளர் பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பகுதிகள் மலசலகூடங்கள் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.