மஸ்கெலியா தோட்டப்பகுதிகள் தொற்று நீக்கம்





 (க.கிஷாந்தன்)

 

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட தோட்டப்பகுதிகள் இன்று (24.11.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

 

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (23) 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே தொற்று நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி பிரவுன்ஸ்வீக், பெனியன், காட்மோர், ஸ்டொக்கம் ஆகிய தோட்ட பகுதிகளில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. மேற்படி தோட்டப்பகுதிகளில் சுமார் 500 பேர்வரை சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம் இதற்கான வேலைத்திட்டம் மஸ்கெலியா பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டது.