பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான சாட்சிகளை அவர் அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment