தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளடங்கும் சிறுபான்மை இனத்தவர்கள்




 


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் புஞ்சிஹேவாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தேர்தல்கள் செயலகத்தின் ஓய்வுப் பெற்ற பிரதி ஆணையாளர் எம்.எம்.மொஹமட், மனித உரிமை செயற்பாடு நிறுவனமொன்றின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, ஓய்வுப் பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எஸ்.சமதிவகார மற்றும் கே.பி.பி.பத்திரன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும், சில ஆணைக்குழுக்களுக்கான பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன