ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (114), ஸ்டீவ் ஸ்மித் (105), டேவிட் வார்னர் (69) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (22), கேப்டன் விராத் கோஹ்லி (21), ஸ்ரேயாஸ் ஐயர் (2), லோகேஷ் ராகுல் (12) ஏமாற்றினர். பின் இணைந்த ஷிகர் தவான் (74), ஹர்திக் பாண்ட்யா (90) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தனர்.இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 4, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.
Post a Comment
Post a Comment