இணையவழியில்,ஆய்வுக் கருத்தரங்கு




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தின் 9ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. யூ.எல். செய்னுதீன் தலைமையில்,  புதன்கிழமை (25) இணையவழியில் நடைபெறவிருக்கின்றன.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இந்த நிகழ்வை, கலாநிதி எச்.எம்.எம். நளீர் ஏற்பாடு செய்துள்ளார்.  

கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் இந்தியா, கல்கத்தா சஹா கல்வி நிலையத்தின் முன்னாள் அணுப் பௌதிக சிரேஷ்ட பேராசிரியரும், தென்னாபிரிக்க பிரிட்டோரிறியா பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பேராசிரியருமான புருஷோத்தம் சக்ரபொர்த்தி இணையவழியில் சிறப்புரையாற்றுகின்றார்.

அதனைத் தொடர்ந்து 40க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இலங்கையின் பல்வேறு பகுதியிலுமுள்ள ஆய்வாளர்களால் இணையவழியில் சமர்ப்பிக்கப்படவுமுள்ளன என விஞ்ஞான ஆய்வுக் கருத்தரங்கின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட் தெரிவித்தார்.