சார்ஜன் இர்ஷாத் வீதி,வாய்க்காலாக மாறியதா?





இது முன்னர் நிந்தவூர் 21ஆம் குறிச்சியில் சார்ஜன் இர்ஷாத் வீதியாக இருந்தது. இன்று இது சார்ஜன் இர்ஷாத் வாய்க்காலாக மாறி விட்டது. இதை வீதியாக மாற்றித்தருமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் பல தடவைகள் கெஞ்சிக்கேட்டும் இன்னும் நிவாரனம் கிடைக்கவில்லை.கேட்டால் வீதி பழசாக வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இதற்கு பிறகு போடப்பட்ட வீதிகள் மீண்டும் புதுப்பித்து அழகாகவும் உயரமாகவும் புணரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.தினமும் அதிகமான வாகனங்களும்,மாணவர்களும்,பாதசாரிகளும் பாவிக்கும் இந்த ஓடையை வீதியாக மாற்றித்தருமாறு பொதுமக்கள் சார்பாக பணிவாய் வேண்டிக் கொள்கின்றேன்.