பிரதமரின் பிறந்த நாளில்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


பிரதமரின்   பிறந்த நாளில் வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாட்டில் பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை    இணைப்பாளர் கருணா அம்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமயவிவகார கலாசாரஅலுவல்கள்அமைச்சருமான மஹிந்தராஜபக்சவின் 75வது பிறந்ததினத்தை முன்னிட்டும் இலங்கைத்திருநாட்டின் மக்கள் கொரோனாத்தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டைவிட்டு கொரோனா ஒழியவும் அருளாசி வேண்டி   புதன்கிழமை(19) இரவு    அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனையும் பூஜையும் வழிபாடும் இடம்பெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இரவு 6.30 மணியளவில்  அம்பாறை அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில்   ஆரம்பமாகி 8 மணியளவில் நிறைவுற்றது.

பிரதமருக்கும் நாட்டுமக்களுக்கும் அருளாசிவேண்டிய விசேட  பூசை  நிகழ்வில் பிரதமஅதிதியாக பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை    இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும்  கருணா அம்மான்  கலந்து சிறப்பித்தார். இராணுவ பொலிஸ் பாதுகாப்புபபடைத்துறை உயரதிகாரிகள் கலந்துகொணடனர்.

 ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எம் நஸீர்  ,கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் ,ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்,  காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், மல்வத்தை 24 ஆவது பிரிவின் இராணுவ அதிகாரி அனஸ் அஹமட்  ,இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் புத்தகங்கள் பிரதம அதிதி உட்பட ஏனைய அதிதிகளால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இல்ல வளாகத்தில் அதிதிகளால் பயன்கதரு மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி அனைவருக்கும் நன்றி கூறினார்.