#RA.Pirasaath.
நொச்சியாகம பிரதேச செயலக வளாகத்திற்குள் வருகைத் தந்த முதலையொன்றினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் ஆறு அடி நீளமான முதலை, அருகிலுள்ள ஹல்மில்லகுளம் வாவியிலிருந்து வருகைத் தந்துள்ளதாக வில்;பத்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நொச்சியாகம பிரதேச செயலக வளாகத்தில் வைத்து, வில்பத்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் முதலையை பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலை இன்றைய தினம் வில்பத்து தேசிய சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment