அட்டன் உள்ளிட்ட சில நகரங்களை அபிவிருத்தி செய்ய, நடவடிக்கை




 


(க.கிஷாந்தன்)

 

மலையகத்தில் பிரதான நகரங்களான அட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அட்டன் நகரில் அட்டன் புகையிரத பகுதியில் நிர்மானிக்கப்படும் கட்டடத்தொகுதி மற்றும் பழைய மார்கட் தொகுதியும், தலவாக்கலையில் உள்ள சந்தை தொகுதி, மஸ்கெலியா நகரம் கொட்டகலை கொமர்சல் பகுதியில் இடைநிறுத்தப்பட்ட நடைபாதை பூங்க ஆகியன அபிவிருத்தி செய்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இன்று (23.11.2020) இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

 

இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்வதற்காக இன்று மதியம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த பிரதசங்களுக்கு சென்று களநிலவரங்களை ஆராய்ந்தார்.

 

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட பலர் அமைச்சரோடு உடனிருந்தனர்.