ஓய்வு பெற்றார் ஆசிரியர் ஏ.எம்.இப்றாகீம்





(படத்தில் தகவலாளர் நயீம் அஹமட்டுடன் ஆசிரியர்)

31வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் ஆசிரியர் ஏ.எம்.இப்றாகீம்.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் சமூகக் கல்வி மற்றும் வரலாறு பாட ஆசிரியராக எல்லோருடைய மனங்களிலும் இடம்பிடித்த ஆசிரியர் ஏ.எம்.இப்ராஹிம் கடந்த 26ம் திகதியுடன் தனது 36 வருட கால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றார்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்ப ஆசிரியர் சேவையினை கடந்த 1989.01.02ம் திகதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பட்டதாரி சமூகக்கல்வி பாட ஆசிரியராக கடமையேற்றார்.பின்னர் 1990ம் ஆண்டு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து அங்கு சுமார் 23வருட காலம் கடமை புரிந்து பின்னர் 2013ம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கும் இடமாற்றலாகி அங்கு 2020.02.20ம் திகதி வரை கடமை புரிந்து மீண்டும் சாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றலாகி கடந்த 26ம் திகதியுடன் தனது 31 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
எனக்கு தரம் 9 தொடக்கம் O/L வரை சமூகக்கல்வி வரலாறு ஆகிய பாடங்களை சிறப்பாக கற்றுத் தந்த ஆசான் இப்ராகிம் Sir அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் வழங்குவானாக..