அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு , கூளாவடி நீரோடையில், இன்று காலையில் முதலையொன்று மீன் பிடிப்பவரைக் கடித்துள்ளது.
மீன் பிடித்தவர் மீனை நீரினுள் வலையில் அள்ளி எடுத்தவேளையில் அவரது வலது கையில் ஏதோ கடிப்பது போன்ற பிரமை ஏற்பட்டுள்ளது. கையை உதறிவிட்டுப் பாரத்தபோது சிறிய முதலை ஒன்று நீரினுள் ஓடியதாக, அளிக்கம்பையைச் சேர்ந்த 65 வயதான ராமர் என்ற மீன் பிடிப்பவர் தெரிவித்துள்ளார். இவரது வலது கையில் முதலைப் பற்கள் கடித்த தடமும் காணப்பட்டிருந்தது.
எது எவ்வாறிருப்பினும் முதலைக் கடியிலிருந்து இந்த நபர் தெய்வாதீனதாக உயிர் தப்பியுள்ளார்.
Post a Comment
Post a Comment