ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்,இராணுவ ஆட்சேர்ப்பு




 


வி.சுகிர்தகுமார்   

 இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர்  ணி ணி வன்பொருள் உதவியாளர் , வைத்திய உதவியாளர் , தாதி மருந்தகர்,எலக்றீசியன் ள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும்  நேர்முகப்பரீட்சைகள் 25.11.2020 (புதன்கிழமை) முதல் 02.12.2020 (புதன்கிழமை) வiர் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை  இடம்பெறவுள்ளது.

இந்நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்கின்ற இளைஞர் யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் விரும்புகின்ற  பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதோடு நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்றவர்களுக்கான பொதுவான தேவைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
√ விண்ணப்பதாரிகள் அனைவரும் இலங்கை பிரஜைகளாக இருக்கவேண்டும்.
√ பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும்.
√ குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50,000/- வழங்கப்படும்.
√ இப்பதவிகளுக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானவை.
√ விண்ணப்பதாரிகள் திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26 வயதுக்குள்ளும், பெண்கள் 18-22 வயதுக்குள்ளும் இருப்பது அவசியம்.
√ விண்ணப்பதாரிகளில் ஆண்கள் குறைந்தது 5'4' உயரமுடையவர்களாகவும், பெண்கள் குறைந்தது 5'2' உயரமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும், மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் (GS) அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.