அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையின் மகப்பேற்று நிபுணர் ஒருவரால் பாதிப்புற்ற பெண்மணி ஒருவருக்கு, ரூபா 4 இலட்சம் நட்ட ஈடு செலுத்துமாறு அக்கரைப்பற்று நிதிமன்றத்தினால் இன்று கட்டளையிடப்பட்டது.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கடந்த 2017 ம் ஆண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மகப்பேறு நோய் தொடர்பாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பெண் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சத்திர சிகிச்சை முடிவின் பின்னர், குறித்த பெண்மணியின் வயிற்றில் சிறிய ஒரு துணியினை வைத்து,குறித்த சத்திர சிகிக்சையின் போது குறிப்பிட்ட வைத்தியர் தைந்திருந்தார். அதனால், தொடர்ந்தேர்ச்சியாகப் வலியுற்றுத் துடித்த பெண்மணி நாட்டில் பல வைத்தியசலைகளில் தமது மகப்பேற்று நோயியல் வலியைக்.குறைப்பதற்காகச் சென்றுள்ளார்.இறுதியில்,குறித்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில்,பெண்ணின் வயிற்றில் துணி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, தான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் முறையிட்ட போது, தமக்கு எந்த வித நிவாரணமும ் கிடைக்கவில்லையென்பதுடன் தமது பிரச்சனை என்னவென்று நிருவாகமோ அப்போதைய மகப்பேற்று நிபுணர் ரஜீவ அவர்களோ தமது முறையீடு பற்றிக் கேட்கவில்லையென்றும் பாதிப்புற்ற பெண் தெரிவித்துள்ளார்..
தமக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பாக, தனிப்பட்ட பிராது வழக்காக இதனை தமது சட்டத்தரணி பாறுக் மூலமாக அக்கரைப்பற்று நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இன்றைய தினம் இந்த வழக்கு அழைக்கப்பட்ட வேளையில், குறித்த மகப்பேற்று நிபுணர், தமது மருத்துவக் கவனயீனத்தை, நட்டஈட்டுக் கொடுப்பனவின் மூலம் தீர்ப்பதாகவும் தமது சட்டத்தரணிமூலம் இன்றைய தினம் நீதிமன்றில் உறுதியளித்தார்.குறித்த கொடுப்பனவை அட்டாளைச்சேனைச் சேர்ந்த குறித்த பாதிப்புற்ற பெண்மணி ஏற்பதாகவும் இணங்கியிருந்தார்
குறித்த கொடுப்பனவை எதிர்வரும் மாதம் செலுத்துவதற்கு தவணை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment