கொட்டகலை பகுதியில் மூவருக்கு கொரோனா





 (க.கிஷாந்தன்)

 

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

 

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேற்படி மூவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

 

இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

 

எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.