சுய தனிமைப்படுத்தலில் களுத்துறை சட்டத்தரணிகள் சங்கம்





களுத்துறை சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள் இம்மாதம் 26ந் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ந் திகதி வரை சுய தனமைப்படுத்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அண்மையில் களுத்துறை நீதிமன்றில் பெண் சட்டத்தரணி ஒருவரை சந்திக்க வந்த கட்சிக்காரரான  பெண் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த இப் பெண் சட்டத்தரணி சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால். களுத்துறை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடத் தீர்மானிதுள்ளனர்.