(க.கிஷாந்தன்)
அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.
அட்டன் நகரில் இன்று (25) காலை வரையில் 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கொரோனா ஒழிப்பு செயலணியால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டன. அத்துடன் நகரை நோக்கி வருகை தந்திருந்த மக்களை வீடுகளுக்கு திரும்புமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
அதன்பின்னர் அட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
Post a Comment
Post a Comment