எட்டுபேர்




 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு


திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர். அவர்களின் விபரம்  வருமாறு 

1) டயானா கமகே- ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர்

2) நஸீர் அஹமட்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

3) ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் - முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு 

4)  பைஸால் காஸீம்- முஸ்லிம் காங்கிரஸ் 

5)  எச்.எம்.எம். ஹாரிஸ் - முஸ்லிம் காங்கிரஸ் 

6) எம்.எஸ். தௌபீக் -முஸ்லிம் காங்கிரஸ் 

7) அரவிந்த குமார்- தமிழ் முற்போக்கு முன்னணி 

8) இட்ஸாக் ரஹ்மான் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்த்து 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்றத்தில் மொத்தமாக 225 உறுப்பினர்கள் இருக்க வேண்டியநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும் தேரர்களது கட்சியும் தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களை இன்னமும் நியமிக்காத நிலையில் எஞ்சிய 223 உறுப்பினர்களில் இன்றைய வாக்களிப்பில் 213 பாராளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர்.  இன்றைய வாக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


20 ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தினையடுத்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று (21) சட்டமூலத்தை சமர்ப்பித்திருந்தார்.

அதற்கமைய நேற்று முதல் 20 ஆவது திருத்த சட்டமுலம் தொடர்பில் விவாதம் இடம்பெற்று வந்தது.

இந்த திருத்த சட்டமூலத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.