அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையினால சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார நெறிமுறைகளின்படி அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களும் தங்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியை பாதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment