குறிப்பு - ஆன்லைன் மூலமாக மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் | ONLINE விண்ணப்பததிற்கான இணைப்பு பதிவில் வழங்கப்பட்டுள்ளது
#இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவினால்,
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III தொடர்பாக ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2020) க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
#கல்வித் தகைமைகள்
(1) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்தோ அல்லது பட்டமளிப்பு நிறுவனம் ஒன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தோ கணினியியல் / தகவல் தொழிநுட்பம் / கணினிப் பொறியியல் அல்லது கணினித் தொழிநுட்பம் ஆகியனவற்றில் ஏதாவதொரு பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
(2) (i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்தோ அல்லது பட்டமளிப்பு நிறுவனம் ஒன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தோ பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். (அதில் பட்ட கற்கைநெறி முழுவதிலும் ஆகக் குறைந்தது 1/3 பகுதி கணினியியல் / தகவல் தொழிநுட்பம் தொடர்பானதாக இருத்தல் வேண்டும்.)
மற்றும்
(ii) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்தோ அல்லது பட்டமளிப்பு நிறுவனம் ஒன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தோ கணினியியல் / தகவல் தொழிநுட்பம் தொடர்பாக பட்டப்பின் டிப்ளோமா ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
#வயதெல்லை.- ஆகக் குறைந்த வயதெல்லை 21-35
📌 முழுமையான விபரங்களுக்கு - www.applications.doenets.lk/intro
📌 விண்ணப்ப முடிவுத்திகதி 26.10.2020
Post a Comment
Post a Comment