வி.சுகிர்தகுமார்
இனரீதியாக பரப்பப்படும் வன்முறைகள் தொடர்பான வதந்திகளுக்கு பதிலளித்தல் முறைமை பற்றி இளையோர்களுக்கு பயிற்சி அளிக்கும் இருநாள் செயலமர்வு அக்கரைப்பற்று தம்பட்டை சுவாட் பயிற்சி மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இணைப்பாளர் சுமந்தி தலைமையில் இட-ம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்டத்தை சார்ந்த பல் இனத்தை சார்ந்த இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
இளையோர் மத்தியில் இனரீதியான பாகுபாட்டினை இல்லாமல் செய்வதுடன் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் நோக்குடன் இச்செயலமர்வு இடம்பெற்றது.
இச்செயலமர்வின் மூலம் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகள் நல்லிணக்கம் தொடர்பில் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதுடன் இனமுரன்பாடுகள் உருவாகும்போது அதனை எதிர்த்து அவர்களது ஆதரவினை தெரிவித்து முரன்பாட்டை தவிர்ப்பதே இதன் கருப்பொருளாகவும் அமைந்தது.
பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது பெண்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை கையாள்வதுடன் பெண்களிடையே விழிப்புணர்வையும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் வருகின்றது.
அந்த வகையிலேயே சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயற்பாட்டையும் முன்னெடுத்துள்ளது.
இக்கலந்துரையாடலில் நல்லிக்கத்தை ஏற்படுத்த சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் குழுச் செயற்பாடுகள் மூலமும் தகவல்கள் பரிமாறப்பட்டது.
Post a Comment
Post a Comment