மாடுகளை இறைச்சிக்காக வெட்ட விரைவில் தடை செய்வதற்கான அனுமதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளளார்.இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.
இதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment