அட்டனிலிருந்து கொழும்பு போக்குவரத்து முற்றாக முடங்கியது




 (க.கிஷாந்தன்)

 

|



கினிகத்தேன - கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் 24.09.2020 அன்று காலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.

 

இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில கற்பாறைகள் சரியக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

கற்பாறையை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை அட்டனிலிருந்து கொழும்பு செல்லும் அதேபோல கொழும்பில் இருந்து அட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

இதன்படி கலுகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான வீதியையும், தியகல, நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.