தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்





இன்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.  


மருதமுனையைச் சேர்ந்த விரிவுரையாளர்,   கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், களியோடைப் பாலத்தினை தாண்டிய  பகுதியில் செலுத்திச் சென்ற கார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பிராதான வீதியின் மருங்கில்  உள்ள அணைக்கட்டில் மோதுண்டுள்ளது. இதனால், காரைச் செலுத்திய விரிவுரையாளர் காயங்களுடன் நிந்தவுர் வைத்தியசாரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.குறித்த அணைக்கட்டானது உடைத்துச் செல்லப்பட்டாலும், அதன் கொங்கிறீட் கம்பிகள் தடுத்ததலால் விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகத் தெரிய வருகின்றது.