குளவிக்கொட்டுக்கு இலக்கான, குழந்தை உயிரிழப்பு




 




வவுனியா – ஓமந்தை, நொச்சிமோட்டை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.


நொச்சிமோட்டை பகுதியிலுள்ள காணியை நேற்று (08) துப்புரவு செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.


நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குளவிக்கொட்டுக்கு இலக்கான மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளது.


குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மற்றுமொரு குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.