ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது டெல்லி அணி. இதன்மூலம் சென்னை அணி இந்த தொடரில் தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்து டெல்லி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் பத்து ஓவர்கள் வரை விக்கெட் எதையும் இழக்காமல் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
11ஆவது ஓவரில் சென்னை அணியின் பியூஷ் சாவ்லா வீசிய பந்தில் 35 ரன்களை எடுத்து அவுட் ஆனார் ஷிகர் தவான். அதன்பின் அரை சதம் எடுத்தருந்த பியூஷ் சாவ்லா 13ஆவது ஓவரில் தோனியிடம் பந்தை கொடுத்து அவுட் ஆனார்.
ப்ரித்வி ஷா 64 ரன்கள் எடுத்திருந்தார். ரனியின் ரன்கள் 103ஆக இருந்தது.
அதன்பின் ரிஷஃப் பண்ட மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். ஆனால் 19ஆவது ஓவரில் சாம் கரன் வீசிய பந்தில் அவுட் ஆனார் ஷ்ரேயஸ் ஐயர். இருப்பினும் அந்த மூன்று விக்கெட்டுகளை இழந்து சென்னை அணிக்கு 176 என்ற இலக்கை வைத்தது டெல்லி அணி.
அடுத்தடுத்து ஆட்டமிழந்த சென்னை அணி வீரர்கள்
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் முரளி விஜய் பெரிதாக எந்த ரன்களையும் எடுக்கவில்லை.
14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த வாட்சன் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார். தனது முதல் விக்கெட்டை இழந்தது சென்னை அணி. அதன்பின் முரளி விஜயும் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்ததாக வந்த டூ ப்ளஸிஸ் ஓரளவிற்கு அடித்து ஆட முயற்சித்தாலும், எதிர்முனையில் விஜய்க்கு அடுத்து வந்த கேய்க்வார்ட், ஜாதவ் என யாரும் நிலைத்து நிற்கவில்லை. சென்னை 16ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்நிலையில் களமிறங்கிய தோனி மீது எதிர்பார்ப்புகள் குவிந்தன. ஆனால் 43 ரன்கள் எடுத்து டூ பளசிஸ் அவுட் ஆனார். பின் ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி அடித்து ஆட முயற்சித்தபோது அவர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
விறுவிறுப்பற்ற ஆட்டம்
பொதுவாக சிஎஸ்கே அணியின் போட்டி என்றாலே விறுவிறுப்பாக இருக்கும் ஆனால் நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.
Twitter பதிவின் முடிவு, 1
முதல் போட்டியிலேயே மும்பை அணியை தோற்கடித்து சென்னை அணி தொடரை தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறது. கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றிருந்தாலும், தோனியின் அடுத்தடுத்த சிக்ஸர்களால் ஆறுதல் அடைந்திருந்தனர். ஆனால் நேற்றைய போட்டி எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் வெறும் ஏமாற்றதை மட்டுமே தந்தது என்று கூறலாம்.
போட்டியின் இடையில் தோனியின் ஒரு கேட்ச் மட்டும் பெரிதாக பேசப்பட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று கூறலாம். சாம் கரன் வீசிய பந்தில் தனது பாணியில் `பறந்து சென்று` கேட்ச் பிடித்து ஸ்ரேயஸ் அயரை அவுட் ஆக்கினார் தோனி.
இருப்பினும் அடித்து ஆட வேண்டிய போட்டியில் ஒவ்வொரு ரன்களாக எடுத்து எந்த ஆராவாரமும் இல்லாமல் 44 ரன்களில் தோல்வியுற்றது சென்னை அணி.
கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்
முன்னதாக பாடகர் எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸின் மறைவிற்காக வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
Post a Comment
Post a Comment