187 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்




 


கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 187 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, 122 இலங்கையர்கள் இந்தியாவில் இருந்தும் 58 பேர் கட்டாரிலிருந்தும் மேலும் ஏழு பேர் அபுதாபியிலிருந்தும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டதும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.