அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 250 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
ரொனால்டு ஜெரேமி ஹயாத் எனும் இயற்பெயருடைய இவர் 25 மற்றும் 30 வயதான இரு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் 33 மற்றும் 46 வயதான வேறு இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஜெரேமிக்கு சுமார் நான்காயிரம் பெண்களுடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், அந்தப் பெண்கள் தாமாகவே விரும்பி இவருடன் பாலுறவு கொண்டனர் என்றும் அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.
Post a Comment
Post a Comment