இணைய ஊடகவியலாளர் டெஸ்மண்ட் சதுரங்க டி சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தின் அடிப்படையில் ஊடகவியலாளரைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரது கணனியையும் கைப்பற்றிச்சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லங்காநியுஸ்வெப் lankanewsweb.org இணையத்தளத்தின் ஆசிரியராக இவர் கடமையாற்றிவந்த சதுரங்க டி சில்வா நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்ரிh ஆக்கங்களை பிரசுரித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment