தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது




பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.


சுகாதார அமைச்சர் வௌியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ​வௌ்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.