(க.கிஷாந்தன்)
ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகி
06.07.2020 அன்று காலை 10.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நா
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூட்டைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment