அவருக்கு வயது 92.
சில ஆண்டுகளாகவே இவர் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பேச்சாளர், எழுத்தாளர், தமிழறிஞரான இவர் 50க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், பல்வேறு நாடகங்களை தயாரித்து அளித்துள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்துள்ள இவர், தமிழ்ச்சங்கத்திற்குச் சொந்தமாகக் கட்டடம் கட்டித்தந்தவர். தமிழக அரசின் உயரிய விருதுகளான திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் மன்னர்மன்னன்.
அவரது தந்தை 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் மன்னர் மன்னன். இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி, மொழிப் போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றவர் இவர். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய மன்னர் மன்னன் காமராசர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி ஆர் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைக
Post a Comment
Post a Comment