முற்கொடுப்பனவு செலுத்தியவர்களுக்கான அறிவிப்




கொரோனா அபாயம் காரணமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், இம்முறை ஹஜ் கடமைக்காக பதிவு செய்தவர்கள் அடுத்த வருடம் தமது பயணத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக 25,000 ரூபா முற்கொடுப்பனவு செலுத்தியவர்கள் அதனை மீளப் பெறாமல், அடுத்த வருடம் ஹஜ் செய்ய விரும்பினால், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 
வைப்புத் தொகையை மீளப்பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கோரியுள்ளது.

அந்த ஆவணம் கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் வைப்புத் தொகைக்கான காசோலை உரியவரின் பெயருக்கு அனுப்பப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.