பள்ளிக்குடியிருப்பில் வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்




(SM.IRSAATH)
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் சுபைர் லாபிர் என்பவரை, வாளால் வெட்டிய ச்தேகத்தல் பொலிசாரால் தேடப்பட்டு வந்த இன்னும் சில சந்தேக நபர்களை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று அக்கரைப்பற்று  நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா அவர்கள் இன்று உத்தரவிட்டார்.

இன்றைய தினம் நகர்வு மனு ஒன்றின் மூலமாக ஏனைய சந்தேக நபர்கள் நான்கு பேர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.பிமொஹைதீன் மூலமாக ஆஜராகினர்.குறித்த சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சரியாகப் பெயர்கள் குறிப்பிடவில்லையென்றும்,இற்னு சரணைடையும் சந்தேன நபர்களிலொருவர நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், போட்டியிடுகின்றார் என்றும் இவர் விளக்கமறியலுக்குச் செல்லும் சமயம் இவரது பிரச்சார பணிகள் இடையுறாக அமையும் என்றும் தெமது சமர்ப்பணத்தில் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபுர், தமது கட்சிக்காரரும் ஒரு வேட்பாளர் என்றும்,  முழங்காலின் கீழ் இச் சந்தேக நபர்களால் செய்யப்பட்ட வொள் வெட்டின் காரணமாக வைத்தியசாலைகளில் தொடந்தும் சிகிச்சை பெற்று வருவாதாகவும், இவ்வாறு தனி நபர்கள் மீது தாக்குதலை பட்டப் பகலில் நடத்திவிட்டு பொலிசாரின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இச் சந்தேக நபர்கள் உலாவி வருவதாகவும், எலவே இத் தாக்குதலுடன் தொடர்புடைய இன்னும் சிலர்  விளக்க மறியலுக்குச் சென்று வந்துள்ளதாகவும்  தெரிவித்து பிணை வழங்குவதற்கு தமது முழுமையாக ஆட்சேபனையைத் தெரிவித்தார்.


இதேவேளை, குறித்த வாள்வெட்டுடன் சம்மந்தப்பட்ட  விசாரணகைள் நிறைவடையாதலால் இவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்ற்றுப் பொலிசார்  கோரினர். 

மேற்போந்த சமர்ப்பணஙகளினை செவியேற்ற நீதிபதி   இச் சந்தேக நபர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.