BCAS Campus கல்முனை வளாகத்தின் கௌரவிப்பு




BCAS Campus கல்முனை வளாகத்தின்  கட்டிட உரிமையாளரினை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 07.07.2020 திகதி  செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு BCAS Campus கல்முனை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் BCAS Campus கல்முனை வளாகத்தின் கட்டிட வாடகையினை கணிசமான தொகையை தள்ளுபடி செய்ததனை கௌரவிக்கும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வானது BCAS Campus கல்முனை வளாகத்தின் முகாமையாளர் Eng. N.T Hameed Ali தலைமையில் நடைபெற்றதோடு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் கௌரவ M.M. Nazeer அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதி உரையில், இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய கட்டிட உரிமையாளர்களுக்கும் முன்மாதிரியாய் அமையும் என்றும் இவ்வுன்னதமான பணியினால் பலர் நன்மைடைந்துள்ளார்கள் என்பதனையும் தெளிவு படுத்தியதோடு இவ்வுயரிய பணிக்கு பங்களிப்பு செய்த கட்டிட உரிமையாளருக்கு பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இவ்வுயரிய பணிக்கு தங்களது பாரிய பங்களிப்பை வழங்க காரணமாக இருந்த கட்டிட உரிமையாளர் மர்ஹும் அல்ஹாஜ் H.L.A ஜப்பார் அவர்களின் புதல்வர்களுக்கு BCAS Campus சார்பான நினைவுச்சின்னமும்  புலமைப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.