இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது




இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,724 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். 648 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இதுவரை 11,92,915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4,11,133 பேர் சிகிச்சை பெற்ற வரும் நிலையில் 7,53,050 பேர் குணமடைந்துள்ளனர். 28,732 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் 3,27,031 பேரும், தமிழகத்தில் 1,80,643 பேரும், டெல்லியில் 1,25,096 பேரும், உத்தர பிரதேசத்தில் 53,288 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.