இலங்கைக்கு கடத்த இருந்த போதை பொருட்கள்.. கடைசி நேரத்தில் கைப்பற்றல்




ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட், மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

திருவாடானை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 5 கோடி மேல் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் கைபற்றிய போதை பொருட்கள்
போலீஸார் கைபற்றிய போதை பொருட்கள்
உ.பாண்டி

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


போதை பொருட்கள் கடத்தியவர்கள்
உ.பாண்டி

இதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட், மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.