உலகம் முழுவதுமே ஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும் சொல் அம்மா. பிறக்கின்ற குழந்தை ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக ஆக்கி கொண்டாடி வளர்த்தெடுப்பவள் அன்னை தான். உலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் தினந்தோறும் ஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டு வருகின்றோம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் அன்னையர் தினம் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்ட இந்த காலத்தில், வாட்ஸ் அப் வழியாகவே பலரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். அப்படி பேஸ்புக் ஸ்டேட்டஸில் போடுவதற்காக மட்டும் அன்னையர் தினத்தைக் கொண்டாடாமல் நிஜமாகவே இன்று ஒரு நாள் மட்டுமாவது உங்களை வளர்த்தெடுத்த அன்னையுடன் அன்போடு சில வார்த்தைகளாவது அமர்ந்து பேசி மகிழச் செய்யுங்கள்.
அன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின் அடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு பிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.
Post a Comment
Post a Comment