"இஸ்லாமியப் பணியாளர்கள் இல்லை" - விளம்பரம் கொடுத்த பேக்கரி உரிமையாளர் கைது




#இந்தியா.

இஸ்லாமியர்களை ஒதுக்கும் வகையில் விளம்பரம் செய்த சென்னை மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பேக்கரியின் உரிமையாளரை காவல்துறை கைதுசெய்துள்ளது.

சென்னை தியாகராயநகர் மகாலட்சுமி தெருவில் ஜெயின் பேக்கரி & கன்ஃபெக்ஷனரீஸ் என்ற பெயரில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பேக்கரியில் தயாராகும் பொருட்கள் இணையதளம் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட்டு செய்துவந்தன.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்த பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த், தான் நடத்திவந்த வாட்சாப் குழுவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், 'Made by Jains on Orders; No Muslim Staffs' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய விளம்பரம்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionசர்ச்சைக்குரிய விளம்பரம்

இந்த விளம்பரம் வெளியில் பரவியதும் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் அழைத்து விசாரித்தபோது, சௌகார்பேட்டையில் தங்கள் பேக்கரியில் இஸ்லாமியர்களை வைத்து பேக்கரி பொருட்களை தயாரிப்பதாக சிலர் வதந்திகளை பரப்புவதால் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பிரசாந்த் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவரிடம் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.